கோவை, அக்டோபர் 30,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு, எஸ்.பி. வேலுமணி தனது சமூக வலைதளப் பதிவில், இந்திய விடுதலைக்காகவும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தியாகத்தையும் தொண்டையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.





















