மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ம் தேதி நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.





















