சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,800 சரிந்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்றைய விலை குறைவு நகை வாங்குவோருக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.


















