சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 குறைந்து, ரூ.14,175-க்கு விற்பனையாகிறது. முந்தைய விலையான ரூ.1,15,080-லிருந்து சவரன் விலை ரூ.1,13,400 ஆகக் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


















