3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்காமல், ஏற்கனவே உள்ள பணியிடங்களை பணி நிரவல் செய்வதை கண்டித்தும், பணி நிரவல் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மத்திய அரசில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இருப்பது போல் செவிலியர் என்ற பெயரை செவிலியர் அலுவலர் என மாற்ற வேண்டும், 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.




















