சென்னை நுகர்வோர் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள்!
மின்நுகர்வு மற்றும் மின்கட்டணக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மின்சாரத் துறையில் மிகப் பெரிய டிஜிட்டல் புரட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து மின்நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். மேலும், சென்னையைத் தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மின் விரயம் தடுக்கப்பட்டு, நுகர்வோர்கள் தங்களின் பயன்பாட்டைத் துல்லியமாகக் கண்காணிக்கும் சூழல் உருவாகும்.





















