இந்தியச் சாலைகளில் இயங்கும் வாகனங்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் காப்பீடு செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால், செல்லுபடியாகும் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்க மறுக்கும் முன்னோடி திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். எரிபொருள் மறுக்கப்படும் இந்த நடவடிக்கை இருமடங்கு பலனைத் தரும்.
முதலாவதாக காப்பீடு இல்லாத அல்லது பதிவு செய்யப்படாத வாகனங்களைக் கண்டறிய உதவும், இரண்டாவதாக வாகன உரிமையாளர்கள் காப்பீட்டைப் பெற தூண்டும். தற்போது மாநிலக் காவல்துறையிடம் வாகனங்களின் காப்பீட்டு நிலையைச் சரிபார்க்கச் சீரான எந்தவொரு அமைப்பும் இல்லை.
இதற்காக காவல்துறையினருக்குக் கையடக்கக் கருவிகள் அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளை வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.





















