செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதன்பின்னர் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்று முடிவெடுப்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.





















