• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

October 31, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, February 3, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மற்றவை

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

by Namadhu Amma
October 31, 2022
in மற்றவை
0
பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத்தின் சார்பில், அவரது நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் என ஆயிரக்கணக்கான கழகத்தினர் பங்கேற்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார் நினைவிடத்தில், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, தலைமை கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ,

கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ,

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, கழக மகளிர் இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன்,

ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை என். கணேசராஜா, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ, தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சி.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா,

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளருமான ஓ.எஸ்.மணியன், கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கழக அமைப்பு செயலாளர் வி.கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் முருகையா பாண்டியன், முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் உள்பட கழக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஏற்பாடு செய்து, பார்த்திபனூர் விலக்கு அருகே மேற்கண்ட நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற குருபூஜை விழாவில் 5,000க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் பங்கேற்றனர்

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.