• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா?எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

September 12, 2022
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்|தற்போதைய செய்திகள்

மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா?எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

by Namadhu Amma
September 12, 2022
in தமிழகம்|தற்போதைய செய்திகள்
0
ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா? தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றியதாவது:-

விவசாயிகளின் கண் முன் உபரி நீர் கடலில் கலக்கிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்வது. அற்புதமாக நாங்கள் ஏரி, குளங்களை தூர் வாரிய காரணத்தினால் மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயரும் நிலையை உருவாக்கினோம்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை வழங்கினோம். ஆனால் இப்போது எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. தற்போது கடுமையான மின் கட்டண உயர்வு. 12 சதவீதம் முதல் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.

சராசரியாக பார்த்தால் 34 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். மூன்றில் ஒரு பாகத்தை உயர்த்தியுள்ளார்கள். இந்த மின் கட்டண உயர்வினால் வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். பற்றாக்குறை 12,500 கோடி ரூபாய் தான் என்கிறார் அமைச்சர்.

வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மட்டுமல்ல. வருடா வருடம் 6 சதவீத கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு மேலும் 6 சதவீதம் கட்டண உயர்வு இருக்கும். இதன்படி 2026 ம் ஆண்டு 52 சதவீதம் மின் கட்டண உயர்வை செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்த விடியா திமுக ஆட்சியில் ஆளாகியிருக்கிறார்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவி இரண்டு ஆண்டு காலம் ஆகிறது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் மக்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.

மக்கள் வாழ்வதற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலே, கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்குப்பிடிப்பார்கள். வீட்டு வரியை உயர்த்தி விட்டார்கள்.

இன்றைக்கு அவினாசி பகுதியில் முதலில் நீங்கள் ஆயிரம் ரூபாய் கட்டியிருந்தால் இப்போது இரண்டாயிரம் கட்ட வேண்டும். கடைகளுக்கு 150 சதவீதம் வரியை உயர்த்தி விட்டார்கள்.

இரண்டு வருடமாக கடைகளுக்கு வருவாய் கிடையாது. கொரோனா காலத்தில் மூடி விட்டார்கள். இப்போது தான் கடைகளை மெல்லத்திறந்து வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். வியாபாரத்தை ஆரம்பித்தவுடனே 150 சதவீத வரி உயர்வு. வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு. எப்படி மக்கள் தாக்குபிடிப்பார்கள்.

வேலையில்லாத சூழ்நிலையில்,வருவாய் இல்லாத சூழ்நிலையிலே, இப்போது தான் வருவாய் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதனைக்கூட கருத்தில் கொள்ளாமல், முதல்வர் ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படாமல் இதனச் செயல்படுத்தியுள்ளார்.

அவர் வீட்டு மக்களைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டுள்ளார். கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன். எதில் கமிஷன் வருகிறதே அதனைத்தான் பார்க்கிறார். நாட்டு மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை.

உண்மையிலே நாட்டு மக்களைப்பற்றி சிந்தித்திருந்தால் இதனை செய்திருப்பாரா. அம்மா இருக்கும் போது சரி, நான் முதலமைச்சராக இருக்கும் போதும் சரி இதனை செய்தோமா. ஏன் எங்களுக்கு வரியை உயர்த்த தெரியாதா.

ஆட்சியாளர்கள் மக்களின் நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான ஆட்சிக்கு அடையாளம். அது தான் மக்களாட்சி. அது தான் ஜனநாயகம். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார். தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.