• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

August 24, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

by Namadhu Amma
August 24, 2022
in சிறப்பு செய்திகள்
0
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரை அடித்து தங்கள் வீட்டு உலையில் போடுவதற்கென்றே இந்த விடியா தி.மு.க. அரசு, கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, விளை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களையும் வளைத்துப்போட்டு வருகிறது என்று செய்திகள் வருகின்றன.

தாங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலங்களின் மதிப்பை உயர்த்த, அரசின் அனைத்து துறைகளின் அதிகாரங்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

அம்மாவின் ஆட்சியின்போதும், எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும், தமிழகம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் காந்திபுரம்-கணபதி பாலம், உக்கடம் பாலம் உட்பட பல பாலங்கள் கட்டப்பட்டன.

கோவை நகருக்குள் இருந்த நான்கைந்து பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து வெள்ளலூரில் ஏறத்தாழ சுமார் 65 ஏக்கரில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயம்புத்தூர் மாநகரம் பொருளாதாரம், தொழிற்சாலை மற்றும் வணிக ரீதியான வளாகங்கள் உள்ளடக்கிய முக்கிய நகரமாக இருந்து வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஏற்கெனவே, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளது.

கோயம்புத்தூர் மாநகரத்தை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளான வாளையார் சாலை, பொள்ளாச்சி சாலை, பல்லடம் சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலையும், கோவை மாநகரின் நெரிசலையும் குறைக்கும் வண்ணம் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளலூர் பகுதியில் அமைக்க கழக ஆட்சியில் உத்தேசிக்கப்பட்டிருந்தது.

அரசு காலி இடங்களை ஆராய்ந்து பார்த்ததில், கோவை மாநகராட்சி, வெள்ளலூர் இடத்தை கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அனைத்து பேருந்துகளையும் ஒரே இடத்தில் இயக்கும் விதமாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உத்தேசிக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதியும் கோவை மாநகராட்சிக்கு பாத்தியப்பட்டது. எனவே, பிற்காலத்தில் விரிவாக்கம் மேற்கொள்வதற்கான வசதி உள்ளது. எளிய வகையில் அணுகு சாலைகள் உள்ளது.

61.62 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த (A-grade) பேருந்து நிலையம் உத்தேசிக்கப்பட்டது. மேலும் NH-47 மற்றும் SH-162 சாலைகளுக்கு சந்திப்பில் இடம்பெற்றுள்ளது. உத்தேசப் பேருந்து நிலையம் போத்தனூர் ரயில்வே சந்திப்பில் இருந்து 2.50 Km மற்றும் NH-47 லிருந்து 2 Km தூரத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டு, ரூ.168 கோடியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தன் குடும்பத்தினரின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தோடும், மக்களை மொட்டை அடிக்கும் நோக்கோடும், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டத்தை தலைமுழுக இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் முடிவு செய்ததால், அரசின் சுமார் 100 கோடி ரூபாய் பணிகள் நடைபெற்ற நிலையில், இத்திட்டம் கைவிடப்பட்டால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும்.

அவிநாசி-திருச்சி புறவழிச்சாலை அருகே ஸ்டாலின் குடும்ப நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அதற்காகவே அந்த இடத்திற்கு புதிய பேருந்து நிலையத்தை அமைக்க இந்த விடியா அரசு திட்டமிட்டிருப்பதாகவும், மக்கள் பேசிக்கொள்வதாக செய்திகள் வருகின்றன.

தமிழக மக்களுக்கு என்று இல்லாமல், தன் குடும்பத்தினருக்காக உழைக்கும் விடியா திமுக அரசின் முதலமைச்சர், தமிழகம் நிதிப் பற்றாக்குறையாலும், கடன் சுமையாலும் தத்தளிக்கும் இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்க செலவிடப்பட்ட சுமார் ரூ.100 கோடியை துச்சமாக மதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தன் குடும்ப நலனுக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், கோவை புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் திட்டத்தை “கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன்’’ அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலன் காக்க சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.