ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சர்வதேச அரங்கில் பதக்கம் வென்றுள்ள பேபி சஹானா ரவியின் சாதனை, தமிழக விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வெற்றியின் மூலம் பல இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அவர் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் பாராட்டியுள்ளார்.
வரும் காலங்களிலும் பேபி சஹானா ரவி மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, அதிக பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கும் தாய்த்தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.





















