• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

நூல் விலையை உடனே குறைக்க வலியுறுத்துகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

May 13, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 21, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

நூல் விலையை உடனே குறைக்க வலியுறுத்துகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

by Namadhu Amma
May 13, 2022
in சிறப்பு செய்திகள்
0
விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசப்பு வார்த்தைகள் பேசியே மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் தி.மு.க.வினர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கூறி, பின்புற வாசல் வழியாக வந்த இந்த விடியா அரசு, தனது தேர்தல் அறிக்கையில்:-

தேர்தல் வாக்குறுதி எண். 140:

நெசவாளர்களுக்கு தங்குதடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும்.

தேர்தல் வாக்குறுதி எண். 145 மற்றும் 146:

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.

இவை யாவும் தமிழக நெசவாள பெருமக்களுக்கு தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள். இந்த விடியா அரசு இவற்றை எப்போது நிறைவேற்றும்?

தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ. 150 முதல் ரூ. 200 வரை விலை உயர்ந்துள்ளது.

ஆளுநர் உரையின் போது, அனைத்து ரக நூல் விலை உயர்வு பற்றியும், அதனால் சுமார் 40 லட்சம் நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளது குறித்தும், விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், நான் சட்டமன்றத்தில் பேசினேன்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மின்சாரத்துறை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி நூல் விலை உயர்வு குறித்தும், இந்த விலை ஏற்றத்தால் வாழ்வு இழந்திருக்கும் இவர்களை எப்படி மீட்கப்போகிறீர்கள் என்றும், நூல் விலை ஏற்ற இறக்கத்தை தவிர்க்க, நூல் விலையினை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கும் முறையினைக் கொண்டுவர வேண்டும் என்றும், இதன்மூலம் கைத்தறி, விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும் என்றும் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்.

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே என்றும், நெசவுத்தொழிலை காக்க இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நூல் விலை உயர்வினால் நெசவுத்தொழிலே நலிந்து விடும் அபாயத்தில் உள்ளது என்றும், திருப்பூரில் பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் கூறி, அரசு உடனடியாக நூல் விலையினை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் கழக உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், இதுவரை நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, மத்திய அரசை, இந்த அரசு சுட்டிக்காட்டுகிறது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம் என்று கூறும் இந்த விடியா அரசும், அதன் கூட்டணிக்கட்சியினரும், நூல் விலையை குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்யவும், நாடாளுமன்றத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

மக்களுக்கு நன்மை செய்வதாக வாய் நீளம் காட்டும் இந்த விடியா அரசின் அவலங்களையும், அலங்கோலங்களையும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.