• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தி.மு.க. அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

May 4, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 21, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

தி.மு.க. அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

by Namadhu Amma
May 4, 2022
in சிறப்பு செய்திகள்
0
அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

30-04-2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியத்தைக் கூறி மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், தவறேதும் இழைக்காத மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்

மருத்துவர் ஏ.ரத்னவேலை காத்திருப்பு பட்டியலில் தமிழ்நாடு அரசு வைத்திருப்பதாக செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

பாரம்பரிய உறுதிமொழியான ஹிப்போகிராடிக் உறுதி மொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சபத்’ என்ற பெயரில் மருத்துவ மாணவர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட உறுதிமொழியை புதிதாக மருத்துவம் பயில வரும் மாணவ, மாணவிகள் ஏற்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது.

இது குறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இது மாணவர்களின் விருப்பம் தானே தவிர கட்டாயம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்லூரி மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தாங்கள் தான் இந்த புதிய உறுதிமொழியை தேர்ந்தெடுத்ததாகவும், வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் பதிவிறக்கம் செய்த உறுதிமொழி படிவத்தை எந்த பேராசிரியரிடமும் தாங்கள் காண்பிக்கவில்லை என்றும்,

இது குறித்து கல்லூரி முதல்வருக்கு ஏதும் தெரியாது என்றும், இந்த ஒற்றை வாக்கியத்திற்காக கல்லூரி முதல்வர் மாற்றப்படுவார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், நேர்மையான, ஊழலற்ற முதல்வரை தாங்கள் இழக்க விரும்பவில்லை என்றும், சமஸ்கிருதத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் எழுதி வாசித்ததாகவும், சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை என்றும்,

சமஸ்கிருதத்தில் இருக்கும் ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழி படிவத்தை ஏற்கக்கூடாது என்று எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்படவில்லை என்றும், நேற்று முன்தினம் தான், அதாவது நிகழ்ச்சி முடிந்த பின்புதான்,

இனி வருங்காலங்களில் ஹிப்போகிராடிக் உறுதிமொழியை தான் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்ற உறுதிமொழி பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இந்த சூழ்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அரசின் இந்த முடிவு பாரபட்சம் கொண்டதாகும்.

‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளை பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும்,

பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற உறுதிமொழி ஏற்கெனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதன்மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்த தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது.

மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காதது இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதை கருத்தில் கொண்டு, மருத்துவர் ஏ.ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும்,

இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.