• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

April 26, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 21, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

by Namadhu Amma
April 26, 2022
in சிறப்பு செய்திகள்
0
சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி துணைத்தலைவர் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது ஆரம்ப நிலைளிலேயெ இதனை எதிர்ப்பதாக கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சியினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி குழு தலைவர் செல்வ பெருந்தகை பேசும்போது முன்னாள் முதல்வர் குறித்து சில வார்த்தையை தெரிவித்தார்.

அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவரின் பேச்சு குறித்து பேரவை தலைவரை நோக்கி முறையிட்டார். தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவையில் சில நிமிடங்கள் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியை நோக்கி அமைச்சர் பெரியகருப்பன் குரல் எழுப்பினார். தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கழக உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து பேரவை தலைவரின் இருக்கை அருகே சென்று பேரவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அவரிடம் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவை முன்னவர் பேசினார். பின்னர் முதல்வர் பேசினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து சபையில் கண்ணியத்தை காக்க உறுப்பினர்கள், அமைச்சர்களும் ஒரு சேர அதற்குறிய மரியாதையை தர வேண்டும்.

ஒரு அமைச்சர் எழுந்து மரியாதைக்குறைவான வார்த்தைகளை சொன்னால், அது சபை மரபுக்கு உரியதுதானா? என்பதை சபாநாயகர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் பேசியது அவைக்குறிப்பில் இல்லை என்பது ஏற்புடையதாக இல்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று

பேசினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்ற நடவடிக்கையில் கழகத்தின் சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து நின்று பேச முற்பட்டபோது,அமைச்சர் பெரியகருப்பன் மரியாதைக்குறைவாக உட்காருடா என்ற வார்த்தையை,கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தினால் கழகத்தின் சார்பாக அமைச்சர் பெரியகருப்பனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

கேள்வி:- இன்று பேரவையில் பல்கலைக்கழக திருத்த மசோதா கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு கழகம் ஆரம்ப கட்டத்திலே எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?

பதில்:- பல்வேறு கட்டங்களில், பல்வேறு கருத்துக்கள் இந்த சட்ட மசோதாவின் உட்பொருள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்பதை நாங்கள் இங்கே கருத்தாக பதியவைக்க கடமைப்பட்டுள்ளோம்.

கேள்வி:- 1995-ம் ஆண்டு இதேபோன்று ஒரு அரசினர் தீர்மானம் கொண்டு வந்தபோது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மீது உங்கள் கருத்து என்ன?

பதில்:- சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு தி.மு.க. இரட்டை வேடம் போடுவதை தான் அது காட்டுகிறது.

கேள்வி:- இன்றைக்கு முதல்வர் பேசும்போது ஆளுநர் போக்கு குறித்து குற்றம் சாட்டி பேசினாரே?

பதில்:- இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநர் குறித்து தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டுதான் யார் ஆளுநராக இருந்தாலும் செயல்பட முடியும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை. ஆனால் பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. அரசு நியமிக்கவேண்டும் என்ற கருத்தும், இல்லை ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்யும்.

இவ்வாறு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கூறுகையில் நாங்கள் வெளிநடப்பு செய்ததற்கு காரணமே அமைச்சர், சட்டமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்ச்சனம் செய்த காரணத்தினால் தான். அதனை அவையில் இருக்கின்ற முதல்வர் டுப்படுத்தாமல், ஆதரவு
தெரிவிக்கின்ற வகையில் கருத்து சொன்ன காரணத்தினால் தான் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.