• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

இந்தி மொழி விஷயத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

April 18, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 21, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

இந்தி மொழி விஷயத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

by Namadhu Amma
April 18, 2022
in சிறப்பு செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் இன்று நிலவுகிறது.

தன்னலத்திற்காக மத்திய இளநிலை கல்விக் கழக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை துவக்குவது அல்லது அதனை விலைக்கு வாங்குவது, ஆங்கில பெயர்களை வியாபார நிறுவனங்களுக்கு வைப்பது, பிற மாநிலங்களில் வியாபார நிறுவனங்களை துவக்குவது என்ற வரிசையில் தற்போது முதலமைச்சரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை தி.மு.க. அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன.

அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற ஆட்சிமொழி குழு தலைவர் என்ற முறையில் ஆட்சி மொழி கூட்டத்தில் பேசியபோது, ‘ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழியை பயன்படுத்துங்கள்’ என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பிற மாநிலங்களை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு முதலமைச்சர் “இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்” என்று வீராவேசத்துடன் விமர்சித்தார். ஆனால், இன்று தன்னுடைய அறிவிப்புகளை இந்தி மொழியில் வெளியிடுகின்றார் முதலமைச்சர்.

தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும், குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வது, பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது,

பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளை தோற்றுவிப்பது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவிப்பது போன்றவை ஆகும்.

ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் அதை செய்யாமல், தன்னை வளர்த்து கொள்ளும் பணியில், தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தேசிய தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் தி.மு.க.வால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும்

அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

ஒரு பக்கம் இந்தி திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.. தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழி கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்கு தில் ஏன் மும்மொழி கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்!

தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் இந்த செயலை பார்க்கும்போது, “பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன

தி.மு.க.வின் செயல்பாடுகளை கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.