சென்னையில் தங்கம் விலையில் இன்று காலை சரிவு ஏற்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த மாற்றம் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.1,920 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,120 உயர்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கு விற்பனை.
சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.





















