தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவரும். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தின் சார்பில் சுகுணாபுரத்தில்அண்ணா பிறந்தநாள் விழாநடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் அமைச்சரும். தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து கருணாபுரத்தில் கழக்கொடியை என்.பி.வேலுமணி எம். எல்.ஏ. ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பேரறிஞர் அண்ணா தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலச் சிந்தனைகள் நினைவுகூரப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பகுதி கழகச் செயலாளர் தி.மதனகோபால், வட்டக் கழகச் செயலாளர் ஏ.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் டி.பி.வேலுச்சாமி. ராஜா என்கிற ராமமூர்த்தி, பகுதி கழகச்செயலாளர்கள் எஸ்.எம்.உசேன், கே.ஆர்.செல்வராஜ். சி.கே விஸ்வநாதன், கே.கௌதமன், பேரூராட்சி கழகச் செயலாளர் கே.கிருஷ்ணராஜ், கே.எஸ். சங்கர், கேரள மாநில எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் சுகுணாபுரம் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், சார்பணி மாவட்ட நிர்வாகிகள் இ.கே.பழனிசாமி. செல்லாபாய், ஜி.ராஜேஷ். மாமன்ற உறுப்பினர்கள் கோவைபுதூர்டிரமேஷ். முராஜேந்திரன், பகுதி கழகத் தலைவர் சித்திரை செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
தொண்டர்கள் திரளாக பங்கேற்பு இதுதவிர சார்பணி மாவட்டச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அவரது மக்கள் நலப் பணிகளையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அண்ணாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.





















