தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்க உள்ளதாக இன்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு சுமார் ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னதாக அரசு தெரிவித்திருந்தது.
முதலில் செப்டம்பர் 15-ஆம் தேதி திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக தொடக்க தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 28-ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது





















