சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்
தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர், தமிழ் இலக்கியவாதி, பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையோடு, தமிழின் பெருமையை இனிமையோடும், நகைச்சுவை உணர்வோடும் எளிய தமிழால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே கொண்டு சேர்த்த பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .





















