தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக வீடியோ வெளியான நிலையில் ஆறு டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
140 ரூபாய் விலை கொண்ட பாட்டிலுக்கு கூடுதலாக 20 ரூபாய் பணம் வசூலித்ததாக ஊழியரிடம் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுபானங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள விலை மற்றும் விற்பனை ரசீதை சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால், அதன்பேரில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















