கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.19) விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் உயரமான அலைகள் எழக்கூடும் என்றும், தாழ்வான பகுதிகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறிக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















