விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தற்காலிக குட்டைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது என்றும், சிலைகள் கரைப்பதற்கான திட்டமிடல் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சிலைகள் கரைக்கும் இடங்களை அடையாளம் காணுதல், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்தல், சிலைகளின் எண்ணிக்கை மற்றும் உயரத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





















