சென்னையில் இன்று (செப். 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.14,170 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் நீடித்து வருகிறது. கடந்த செப். 10-ம் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14,255-க்கும், சவரன் ரூ.1,14,040-க்கும் விற்பனையானது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015 ஆகவும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120 ஆகவும் விற்பனையானது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையானது.
இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





















