நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில், அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத்துறை இணை அமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மாவுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மரக்கன்று நடப்பட்டதுடன், குத்துவிளக்கும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.





















