ஜப்பானின் ஐச்சி–நாகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய மகளிர் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இந்தியாவுக்காக முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியின் தொடக்கம் முதலே வீராங்கனைகள் வெளிப்படுத்திய மன உறுதி, விடாமுயற்சி மற்றும் அபாரமான விளையாட்டுத் திறன் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
இந்த வெற்றி சாம்பியன் பட்டத்தை மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, சாதனைகளை நோக்கிப் பயணிக்கவும் உத்வேகம் அளித்துள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்





















