கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புற நுகர்வோரும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்ட நிலையில், கிராமப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 45 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது விநியோக நிலை சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மூலம் நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பகுதிகளிலும் 25 நாட்களுக்கு ஒருமுறை எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி கிடைத்துள்ளது





















