தலைமைச் செயலகத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்ட அரசாணையில், ”தலைமைச் செயலகத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை என்ற புதிய துறையை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை செயல்பட்டு வந்த இந்து சமய மற்றும் அறநிலைய ஆணையரகம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
இதன்படி, இந்து சமயம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் தொடர்பான நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் புதிய துறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அமைப்பு மற்றும் பணிகள் தொடர்பாக அரசாணையில் பல்வேறு வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம், கோயில்கள் நிர்வாகம், அறநிலையங்கள் தொடர்பான பணிகள் மற்றும் அதனுடன் இணைந்த அரசின் நடவடிக்கைகள் மேலும் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் புதிய துறையை உருவாக்கி அரசு அரசாணை வெளியிட்டிருப்பது, தமிழக அரசின் நிர்வாக ரீதியான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.





















