மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (செப்.16) கடைசி நாளாகும்.
இரு தொகுதிகளிலும் செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே களத்தில் இறங்கியுள்ளனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.





















