மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் (தனி) தொகுதியில் கே. பானுமதி ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். கட்சியின் ஆட்சி மன்றக் குழு பரிசீலனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ம் தேதி நிறைவடைகிறது. வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட உள்ளன.





















