• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விஜய் சேதுபதி–பாலாஜி தரணிதரன் கூட்டணியில் ‘பத்தா’

விஜய் சேதுபதி–பாலாஜி தரணிதரன் கூட்டணியில் ‘பத்தா’

September 20, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment

விஜய் சேதுபதி–பாலாஜி தரணிதரன் கூட்டணியில் ‘பத்தா’

by Admin
September 20, 2026
in Entertainment, Movie
0
விஜய் சேதுபதி–பாலாஜி தரணிதரன் கூட்டணியில் ‘பத்தா’
508
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.

அக்டோபர் 1-ல் திரைக்கு வருகிறது

ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அக்டோபர் 1-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பத்தா’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், இசை வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது.

அட்லிக்கு விஜய் சேதுபதி நன்றி

விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-

“முதலில் அட்லி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க அவர் முன்வந்ததுடன், கதையை கேட்ட உடனேயே ‘இந்தப் படம் உலக விழாக்களிலும், திரையரங்குகளிலும் பெரிய அளவில் பேசப்படும்’ என்று கூறினார். அவரது அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

முராத் சார், அஜித் சார் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

பாலாஜி தரணிதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவரது படங்களை பார்த்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம்.

யாராவது தன்னை பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாக பேசாத நல்ல மனிதர் பாலாஜி. அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவரைப் போன்ற ஒருவரால்தான் இந்தப் படத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரைப் போன்ற நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

லிஜோமோல் ஜோஸ் நடிப்புக்கு பாராட்டு

“லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவரது நடிப்பை பார்த்திருக்கிறேன். ஆனால் திரையில் பார்த்தபோது, கணவன்–மனைவியாக வாழும் வாழ்க்கை, வீடு, குழந்தை என அந்த உலகத்துக்குள் அவர் முழுமையாக சென்றிருந்தது தெரிந்தது.

வீட்டில் இருக்கும் ஒருவரைப் போல அந்த இடத்தையும், பொருட்களையும் அவர் பயன்படுத்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது. அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று விஜய் சேதுபதி கூறினார்.

சாய் அப்யங்கருக்கு பாராட்டு

“சாய் அப்யங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

அதேபோல் அந்த சின்னப்பையன் ஆவன் சிறப்பாக நடித்திருக்கிறான். சகஸ்ரா இந்தக் கதையை தாங்கிச் செல்லும் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை இப்போது இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.

விருதும், வசூலும் கிடைக்கும் படம்

“இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலை பெறும் படம் என இரண்டையும் ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் இருக்கலாம்.

அந்த கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனை சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் உள்ளது” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

ஆஸ்கர் அனுப்ப வேண்டும் என கூறிய சபரி

“விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

படத்தை பார்த்து முடித்த பிறகு சபரி எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். அந்த அளவுக்கு ஒருவர் நம்முடைய படத்தை நம்புகிறார் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நானும் முழுமையாக நம்புகிறேன்.

அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி. அனைவரையும் திரையரங்கில் சந்திப்போம். இந்தப் படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும்” என்று விஜய் சேதுபதி கூறினார்.

முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள்

‘பத்தா’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

3-வது முறையாக இணையும் கூட்டணி

விஜய் சேதுபதி–பாலாஜி தரணிதரன் கூட்டணி 3-வது முறையாக இணைந்திருப்பது ‘பத்தா’ படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share203Tweet127
Admin

Admin

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.