தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படஞ்சேரு மண்டலம் பெட்டகஞ்சர்லா கிராமத்தில் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக மாணவர்கள் சென்றுள்ளனர்.
சிலை கரைப்பு நிகழ்வின்போது எதிர்பாராத விதமாக 6 மாணவர்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















