தமிழகத்தில் இன்று (செப்.10) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல நிலவரம் காரணமாக சில பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று செப். 10 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















