வேளாண் பயிர்களுக்கு 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது” என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.





















