• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

December 19, 2021
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

by Namadhu Amma
December 19, 2021
in சிறப்பு செய்திகள்
0
மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமான கேள்வி

சென்னை,

மின்சாரத்துறை அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது. மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அதோகாதி தானா? என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

“இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயன் பெறுவர்” என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களை வஞ்சிப்பது போல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது.

அண்மையில், புதுடெல்லியில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் 80 விழுக்காடு மூலதன செலவுக்கான கடனை அளிக்கும் மத்திய நிதி நிறுவனங்களான மின்விசை நிதி நிறுவனம், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், இந்திய புதுப்பிக்கக்கூடிய மின் மேம்பாட்டு முகமை ஆகியவை கடனுக்கான வட்டியை குறைத்துக் கொள்வது மற்றும் 2021-ம் ஆண்டு மின்சார திருத்த சட்ட முன்வடிவை திரும்ப பெற்றுக் கொள்வதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்துவிட்டு வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரம்,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் “உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். இதனுடைய உள்ளார்ந்த பொருள், நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை, கல்விக்கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதுதான்.

ஒரு மாநிலத்தினுடைய மின் துறையின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது என்பது அந்த மாநிலத்தில் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக மின் உற்பத்தி நிறுவு திறனை ஏற்படுத்த ஏதுவாக அனல் மின் திட்டங்கள், நீர் மின் திட்டங்களை புதிதாக செயல்படுத்துவது, அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை நிரந்தரமாக கொள்முதல் செய்ய வழிவகை செய்வது,

சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் சமுதாயத்தினை பாதிக்காத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் ஊக்குவிப்பது, மின் தொடரமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவது, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் பாதையை தொடர்ச்சியாக அமைப்பது, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக பூமிக்கு அடியில் கம்பிவடம் அமைப்பது, மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவது, மின் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் குறைந்த மின் அழுத்த விநியோக அமைப்பை உயர் மின் அழுத்த விநியோக அமைப்பாக மாற்றுவது, மின் மாற்றிகளை மாற்றியமைப்பது, கம்பிவடம் மாற்றுவது, நவீன மீட்டர் பொருத்துவது என பல காரணிகளை உள்ளடக்கிய தொடர் பணிகளாகும்.

இந்த பணி ஒரு தொடர் சங்கிலி போல காலத்திற்கேற்ப, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, தேவைக்கேற்ப தொடர்ந்து கொண்டேயிருக்கும். உட்கட்டமைப்பு பணிகள் எப்போது முடிந்து இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு ஏதாவது கால அளவு இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை. அமைச்சர்ஏதாவது கால அளவை குறிப்பிட்டு இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது.

எனவே, உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்பது இந்த வாக்குறுதி ‘அதோகதி’ என்பது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்து போக செய்யும் நடவடிக்கையை தான் தி.மு.க. அரசு எடுத்து கொண்டிருக்கிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். இந்த மக்கள் விரோத செயலுக்கு அனைத்திந்திய அண்ணர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனா கொடுந்தொற்று, விஷம் போல் எறும் விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை என பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நிலையில், ‘மாதாந்திர மின் கணக்கீடு’ என்ற வாக்குறுதியையாவது இந்த அரசு செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.