• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

September 7, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

by Namadhu Amma
September 7, 2022
in தற்போதைய செய்திகள்
0
மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப்பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய திரு. பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளான நேற்று காலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையாத் தேவர் நினைவிடத்தில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, கழக பொருளாளரும்,

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ,

கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர். எஸ்.டி.கே.ஜக்கையன், மேலூர் தொகுதி பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்,எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

மூக்கையாத்தேவருக்கு வீர அஞ்சலி செலுத்திய இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. சிறப்பான முறையில் செய்திருந்தார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.

இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தி.விலக்கு பகுதியிலிருந்து கழகத்தினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, நீதிபதி, தமிழரசன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், இளைஞர்கள், கழக செயல்வீரர்கள் செயல் வீராங்கனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தென் மாவட்டங்களில் தனக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போல் ஓபிஎஸ் மாய தோற்றத்தை உருவாக்கி இருந்தார். ஆனால் அந்த தோற்றத்தை சுக்கு நூறாக உடைக்கும் வண்ணமும், தென் மாவட்டத்தில் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு அலை, செல்வாக்கு ஆகியவற்றை நிரூபிக்கும் வகையிலும் இந்த கூட்டம் அமைந்திருந்தது என்று பத்திரிகை ஊடகங்கள், அரசியல் வல்லுனர்கள் வெளிப்படையாக கூறினர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.