• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

April 7, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

by Namadhu Amma
April 7, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழகத்திற்கு விடியலை தருகிறோம் என்று கூறி விட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.

சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் உள்ள தேவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை தாங்கி பேசினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கழக ஆட்சியின் போது 5 சதவீத வரி உயர்வை உயர்த்திய போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சொத்து வரியை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது அ.தி.மு.க அரசு என்று தெரிவித்தார். இப்போது தமிழகத்தில் தி.மு.க.வின் விடியா ஆட்சி நடக்கிறது. விண்ணை முட்டும் அளவுக்கு சொத்து வரியை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் செயலில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த காலங்களில் மக்களின் மனங்களில் சந்தோசம் என்னும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும் வகையில் நல்லாட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தார். அம்மாவின் மறைவுக்குப்பின் அதே வழியை பின்பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் நல்லாட்சியை மக்களுக்கு தந்தார்கள்.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க.வினர் ஸ்டாலின் தான் வாராரு. விடியல் தரப்போறாரு என்று பாட்டு பாடினர். தமிழகத்திற்கு விடியலை தருகிறோம் என்று கூறி விட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது விடியா தி.மு.க. அரசு.

அம்மா ஆட்சியின் போது ஒரு மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படார் என்று கூறி தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஸடாலின் குடும்பத்தை சேர்ந்தவருமான கனிமொழி, அதிமுக அரசுக்கு எதிராக பெண்ணினத்தின் போராளி நான். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ள பெண்ணின் குடும்பம் உட்பட அனைத்து பெண்ணினத்தை காப்பாற்றாமல் விட மாட்டேன் என்று போராட்டம் நடத்தினார்.

இப்போது தமிழகம் முழுவதும் தி.மு.க ஆட்சியில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்காமல் கனிமொழி அமைதியாகி விட்டாரே என்று தூத்துக்குடி மாவட்ட மக்களங கேள்வி எழுப்புகின்றனர்.

தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் ஆகியும் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் இதுவரை மக்களுக்கு செய்யவில்லை.

ஆனால் சொத்து வரியை நூறு சதவீதத்திற்கும் மேல் உயர்த்தி மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி உள்ளது. சொத்து வரியை உயர்த்தியதற்காகவும், கோவில்பட்டி நகரில் 135 சாலைகள் அமைக்கும் பணிகளை ரத்து செய்துள்ளதற்காகவும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன். கோவில்பட்டி நகர வளர்ச்சிக்காக நான் எந்த போராட்டத்தையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.