• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவிப்பு

சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவிப்பு

March 17, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவிப்பு

by Namadhu Amma
March 17, 2022
in தற்போதைய செய்திகள்
0
சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவிப்பு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்,

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நேற்று காலை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வினை உடனே நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் மற்றும் டி.ஏ. அரியருடன் வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடித்து வழங்க வேண்டும்,

அதுவரை இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், நகர்ப்புற பேருந்துகளில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ரூ.100 இன்சென்டிவ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை காரணமாக டபுள் டூட்டி என்ற பெயரில் தொழிலாளர்களை பழிவாங்குவது, தொழிலாளர்களுக்கு வார ஓய்வு வழங்காதது, அண்ணா தொழிற்சங்க தொழிலாளிகளையும், நிர்வாகிகளையும் பழிவாங்கும் போக்கு ஆகியவற்றை கண்டித்தும் இந்த வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன வாயிற் கூட்டத்திற்கு சேலம் மண்டல செயலாளர் கே.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு கஜானாவிலிருந்து, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை போல், போக்குவரத்து ஊழியர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், அதை வலியுறுத்திதான் அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலிருந்து ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது பழிவாங்கும் போக்கை கைவிட்டு அவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது 2021 பொதுத்தேர்தல் சமயத்தில் கிராமசபை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்நடைமுறைப்படுத்தபடும் என்று வாக்குறுதி அளித்தார் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓட்டுனர்கள் விபத்து நடத்தினால், விபத்து நடந்தது குறித்து ஆய்வு செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும், ஆனால் அதற்கு முன்பாகவே அரசு ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுடைய பணப்பலன்களை நிறுத்தி வைப்பது போன்ற ஓட்டுநர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். போக்குவரத்து பணியாளர்களுக்கு தரமான உணவு, சீருடை மற்றும் சுகாதாரமான கழிவறை ஆகியவற்றை வழங்க வேண்டும். இது கோடைகாலம் என்பதால் ஓட்டுநர்களுக்கு 2 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் அரசிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம்.

இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அனுமதி பெற்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் நலனுக்காக அண்ணா தொழிற்சங்கம் என்றென்றும் பாடுபடும்.

கழகம் ஆட்சியில் இருந்தபோது பள்ளி மாணவர்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களில் ஒரு காவலரை நிறுத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாணவர்கள் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி பயணிக்கிறார்கள், அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உரிய பாதுகாப்பில்லை, அவர்கள் மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.

இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பாலசுப்பிரமணியன், கு.சித்ரா, மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டி.சித்துராஜ், மண்டல தலைவர் எம்.நல்லப்பன், மண்டல பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இணை செயலாளர்கள் கந்தசாமி, சரவணன், பழனிசாமி, துணைத்தலைவர்கள் கண்ணன், மகாலிங்கம், ரமேஷ், அன்புக்கரசு, வேணு உள்ளிட்ட போக்குவரத்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.