• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

September 22, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

by Namadhu Amma
September 22, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர்,

ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

ரேஷன் கடையில் மாமூல் வசூலிக்கின்றனர். மக்காச்சோளத்தையும் கேழ்வரகையும் போட்ட ஆட்சி திமுக ஆட்சி. சோத்துக்கே கஷ்டத்தை உருவாக்குகின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி. கலைஞருடைய மகன் தான் ஸ்டாலின் என்ன நல்லது செய்வார் என்று மக்கள் ஓட்டு போட்டார்கள் என்பது தெரியவில்லை.

ஆளும் திமுக கட்சியின் ஒரே நோக்கம் மணல் கொள்ளைய அடிக்க வேண்டும், மொத்தமாக சுருட்டி கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய் கரையையே சுருட்டி செல்கின்றனர்.

மண்ணை தூர் வாருகின்றோம் என்று கூறி கண்மாய் கரையை எடுக்கின்றனர். ஒன்று மட்டும் உண்மை. விதைத்தது தான் முளைக்கும். விதைத்த இடத்தில் தான் விதையை தேட வேண்டும். தி.மு.க.வினர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நாங்கள் அம்பலப்படுத்தி கொண்டு தான் இருக்கின்றோம். தகுந்த ஆதாரங்களோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

யார் யார் பெயரில் லைசென்ஸ் உள்ளது. யார் யார் பெயரில் ரசீது போடுகின்றனர். எல்லா ஆவணங்களையும் வைத்து கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். சட்டத்துக்கு உட்பட்டு மணல் எடுக்க வேண்டும். மணல் கொள்ளையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். அரசு அதிகாரிகள் விழிப்போடு இருக்க வேண்டும். உப்பை தின்றால் தண்ணீரை குடித்தே ஆக வேண்டும். ஓட்டு போட்ட மக்களை தெருவில் நிற்க வைத்து விட்டு இந்த ஆட்சி அலங்கோலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

ஆயிரம் ரூபாய் வீட்டு தீர்வை செலுத்தியவர்கள் எல்லாம் இன்று 2000 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கிறது. வீட்டு வரி உயர்ந்ததால் வீட்டு வாடகையும் அதிகரித்து விட்டது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை எதற்கு ஆரம்பித்தார்.

மிட்டா மிராசுதாரர்களுக்காகவோ, ஆலை அதிபர்களுக்காகவோ, அம்பானி, அதானி வகைறாக்களுக்காகவோ கிடையாது. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு இருக்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவே அண்ணா தி.மு.க.வை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்தார்.

இந்த இயக்கம் இருக்கின்றவரை மக்களை பாதிக்கின்ற செயலை நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிமுகவின் எக்கு கோட்டை. வத்திராயிருப்பு பகுதிக்கு ஒரு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்த அரசு எடப்பாடியார் அரசு. வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான்.

நாங்கள் கட்டிய அந்த அலுவலகத்தை திமுகவிவினர் திறந்து வைத்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிராக எப்போதுமே ஒரு சைலண்டான எதிர்ப்பு அலை வீச தான் செய்யும். என்னதான் நல்லது செய்தாலும் ஒரு எதிர்ப்பு அலைகள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சி நடத்தினாலும் எங்களுக்கு ஐந்து சதவீதம் எதிர்ப்புகள் தான் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 95 சதவீத எதிர்ப்புகள் எழுந்துள்ளது. திமுக ஆட்சி மீது மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். டாஸ்மாக் பார்கள் அனைத்தும் கரூர்காரர்கள் பேரில் தான் செயல்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் எந்த திமுகவினர் பெயரிலும் பார் கிடையாது. தமிழகம் முழுவதிலும் இதே நிலை தான் உள்ளது. பாரை எடுத்து நடத்தும் திமுகவினர் கூட மாதம் மாதம் லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது.

சிஸ்டம் போட்டு திருடுவது உலகத்திலேயே திமுகவினரால் தான் முடியும். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுக்கின்றனர். நியாயவிலைக்கடை ஊழியர்களை மிரட்டி தி.மு.க.வினர் பணம் பெறுகின்றனர்.

இதுபோன்ற செயல்கள் ஏழை, எளிய மக்களை தான் பாதிக்கும். பத்து ஆண்டு காலம் உழைத்த தி.மு.க.வினருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. சத்தம் போடாமல் திருடுகின்ற வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. கையை உள்ளே விட்டு கடலையை மட்டும் திருடுகின்றனர். கடலை எடுக்கும் போது தான் வெறும் செடி வருகின்றது.

ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் ஆட்சி அதிகாரம் அவரது கண்ட்ரோலில் கிடையாது. முதல்வரை சுற்றி மிகப்பெரிய வட்டம் ஒரு அதிகார மையம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் ஒரு நல்ல அரசு வர வேண்டும்.

புரட்சிதலைவர் எம்ஜிஆர் அரசு, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு, எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் வந்தால் தான் ஏழை எளிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

செங்கல் விலை, சிமெண்ட் விலை, மோட்டார் விலை விவசாய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். ஏழைகளை பற்றி தெரிந்த ஒருவர், கஷ்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி போல ஏழைகளை நேசிக்கின்ற எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர வேண்டும். அதற்கு எப்போது தேர்தல் வந்தாலும் வாக்காளர் பெருமக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் .

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.