• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

May 11, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

by Namadhu Amma
May 11, 2022
in தற்போதைய செய்திகள்
0
சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

காவலர்கள் நல வாரியத்தின் தலைவர், முன்னாள் நீதியரசர், அசோக் நகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் போது, அவரது பாதுகாப்பு அதிகாரியை அடையாளம் தெரியாத 3பேர் சக்திவேலிடம் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அருள் (எ) குள்ள அப்பு-வை பெட்ரோல் குண்டுகள் வீசி ரவுடிகள் கொள்ளை முயற்சி (10.12.2021)

திருவான்மியூர் சிக்னல் அருகே பிரபல ரவுடி விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் 2 மர்ம நபர்களால் வெட்டி கொலை (3.12.2021)

சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப் பகலில் ரவுடி (சீனிவாசன்) ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் (27.12.2021)

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தலை பிரச்சனை–பட்டாக்கத்திகளுடன் பயங்கர மோதல் (31.12.2021) (சென்னை தியாகராஜர் கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி)

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை தாக்கி 8 சவரன் தங்க நகையை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையன் ஓட்டேரி தாசாமகான் பகுதியில் காதீம் என்பவர் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது 2 நபர்கள் வழிமறித்து பிளேடால்அறுத்து பணம் பறிப்பு. (1.12.2021)

செங்கல்பட்டு அருகே பட்டபகலில் கோஷ்டி மோதலில் பிரபல ரவுடிகள் (கார்த்தி என்கிற அப்பு, மகேஸ்) 2 பேர் வெடிகுண்டுகள் வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் (7.1.2022)

உங்கள் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஜெயச்சந்திரன் என்பவரின் பேக்கரி கடையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் நிதி கேட்டு, தகராறு ஏற்பட்டு கடையை அடித்து உடைத்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் பல மாவட்டங்களில் நடக்கிறது. வெளியில் தெரிவதில்லை. ஏன் இதை தெரிவிக்கிறேன் என்றால், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது.

7.5.2022 அன்று பெரம்பலூரில் ஒரு வீட்டின் உரிமையாளர்கள் வீட்டினுள் இருக்கும்போதே, விடியற்காலையில் கதவை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் வெளியில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றுள்ளனர்.

தனித்து வாழும் வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்கி கொலை மற்றும் கொள்ளை சம்வங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது

திருப்பூர் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில், ரங்கம்பாளையம் கிராமத்தில் ஏழரை பவுன் நகைக்காக 14.12.2021 அன்று 65 வயது முதியவர் பழனிசாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள், வயது 61 ஆகிய இருவரையும் கொள்ளையர்கள் தலையில் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொரு நிகழ்வில், ஈரோடு மாவட்டம், முருங்கத்தொழுவு கிராமத்தில் உப்பிலிபாளையம் அருகில் 68 வயது முதியவர் – கே.சி. துரைசாமி என்பவர் கொள்ளையர்களால் தலையில் தாக்கப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவி தலையில் தாக்கப்பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவத்தில் இருபத்தி ஏழரை பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கூட, அதாவது 7.5.2022 அன்று சென்னை மயிலாப்பூரில் மகாலட்சுமி தெருவில் வசித்து வந்த ஸ்ரீகாந்த் (60) மற்றும் அவரது மனைவி அனுராதா (55) ஆகியோரை கொன்று சுமார் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.

கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அச்ச உணர்வு இல்லாத காரணத்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காமல் இருக்க, காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.