• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு

சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு

January 11, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு

by Namadhu Amma
January 11, 2022
in தற்போதைய செய்திகள்
0
சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுச்சேரி,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு செய்துள்ளது.

கழக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புதுச்சேரியில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில கழக இணை செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை என்றும், புதுச்சேரி கிழக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப்பெட்டி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.

மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் படி நீட் தேர்வு சட்டம் கொண்டு வரப்பட்டது, நீட் தேர்வு சம்பந்தமான வழக்கில், தேர்வு மிக அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியது. மத்திய காங்கிரஸ், கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து, நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க.வே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சியில் அமர்ந்ததும் தற்பொழுது ரத்து செய்ய முடியாது என தெரிந்து, தங்களது இயலாமையை அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் மூடி மறைக்க முயற்சித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் உண்மை நிலையை மூடி மறைத்து மாணவர்களின் உணர்ச்சிகளை தவறாக தூண்டிவிட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கும் தி.மு.க.வின் வஞ்சக செயலை புதுச்சேரி கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் கழக ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு போன்று புதுச்சோயிலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இக்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைத்தலைவருமான ராஜாராமன், மாநில கழக இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், மாநில கழக பொருளாளர் ரவி, மாநில கழக துணை செயலாளர்கள் அன்பழகன், மூர்த்தி, கருணாநிதி, உமா என்ற கோவிந்தம்மாள், சேரன், கிருஷ்ணமூர்த்தி, மணவாளன், குமுதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாணவரணி செயலாளர் பிரதீப், மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.