• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

August 16, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

by Namadhu Amma
August 16, 2022
in தற்போதைய செய்திகள்
0
குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை,

அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை சுமத்தி குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது இந்த விடியா தி.மு.க. அரசு என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசத்துடன் கூறி உள்ளார்.

நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில், மதுரை சேர்ந்த ஹரிணி, சிவசந்தியா, ஸ்நேகா, கலா, ஸ்ரீபூஜா ஆகிய மாணவிகளும், சிலம்பம் போட்டியில் வசந்த் கிஷோர் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதனை தொடர்ந்து அந்த மாணவர்கள் கழக அமைப்பு செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்றனர். அவர்கள் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

அதன் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் மாணவர்களின் நலனை சிந்தித்துப்பார்த்து திட்டங்களை நிறைவேற்றினர். குறிப்பாக ஐ.நா.சபையே பாராட்டிய சத்துணவு திட்டத்தை தந்தவர் புரட்சித்தலைவர்.

ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் எல்லாம் பாராட்டும் வகையில் மடிக்கணினி திட்டத்தை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா ஆவார். அதுபோல அடித்தட்டு மக்களின் கனவை நனவாக்கும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தவர் எடப்பாடியார்.

இன்றைக்கு கல்வியிலும், விளையாட்டு போட்டிகளும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு அடித்தளமிட்டவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ஆவர். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிறது.

ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக பள்ளிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவிகளுக்கு எதிரான பாலியல்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துக்கு இணையாக இருந்த காவல்துறை, தற்போது பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள காவல்துறையை காட்டிலும் மோசமாக உள்ளது.

தினந்தோறும் ஒவ்வொரு துறையிலும் அவலங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் 20 சதவீதம் தான் ஊடகங்களில் வெளி வருகின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்பது போல், முதலமைச்சர் இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறார். இவர் கூறுவதை பார்த்தால் ரோம் நகர் பற்றி எரியும் பொழுது அதைப்பற்றி கவலைப்படாமல் மன்னன் பிடில் வாசித்தானாம் அந்த கதையாக அல்லவா இருக்கிறது.

வெறும் விளம்பரத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்த முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அதுபோல் விளம்பரத்தால் நீங்கள் செய்த அவலங்களை மறைக்க முடியாது. அன்று நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு மக்களை கொடுமைப்படுத்தினார்கள்.

இன்றைக்கு குடும்ப ஆட்சி நடத்தி சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை தந்து மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது தி.மு.க விடியா அரசு.

இந்த விடியா தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி அமைகின்ற நாள் தான் மக்களுக்கு விடியும் அரசாக இருக்கும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.