• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

September 15, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

by Namadhu Amma
September 15, 2022
in தற்போதைய செய்திகள்
0
காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரி கரையையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பென்னேரிக்கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 9-ம்தேதியன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த பகுதிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிடவும், வீடுகளை இடித்து அகற்றும் நடவடிக்கை கை விடவும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது அன்று கைவிடப்பட்டது.

இதனையெடுத்து ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதி பகுதியிலுள்ற 82 வீடுகள் அகற்றப்படவுள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கிச்சென்று அவர்களை பேருந்தில் ஏற்ற முற்பட்டனர்.

அப்போது போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதமானது ஏற்பட்டு தள்ளுமுள்ளு சம்பவங்களும் நடந்தன. பின்னர் அவர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பாலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாமுண்டீஸ்வரி என்னும் பெண்மணி ஒருவரை வலுகட்டாயமாக போலீசார் தூக்க முயன்ற போது மயக்கமுற்றார். இதனையெடுத்து அவர் அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு சகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதில் நந்தினி என்கிற 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனையெடுத்து அதனை தடுத்தி நிறுத்திய காவல்துறையினர், தண்ணீரை ஊற்றி அவரை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.

இதனையெடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளிலிருந்த பொருட்கள் பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கும் பணியானது துவங்கப்பட்ட நிலையில் அவ்வீடுகளின் உரிமையாளர் தன் உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள் கண்முன்னே இடிக்கப்படுவதை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் அங்குள்ள குழந்தை குட்டிகளும் பெற்றோர்களுடன் சேர்ந்து தேம்பி தேம்பி அழுத காட்சி அனைவரின் மனதையும் உருகுலைய செய்தது. இதில் அங்கிருந்த சிலர் நீர்நிலை ஆக்கிரமிப்பு என 80 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் எங்களை வெளியேற்றி நடவடிக்கை எடுக்கிறீர்கள் சரி ஆனால் இவை நீர்நிலை என தெரிந்தும் எங்களிடம் வரி வசூல் செய்தது ஏன், மின் இணைப்பு வழங்கியது ஏன், இந்த இடத்தில் தான் வசிக்கிறோம் என ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கியது ஏன் எனவும் கேள்விகளை எழுப்பினர்.

எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எங்களுக்கு துரோகம் இழைப்பது எனவும் அழுதபடியே ஆவேசமாக கேள்விகளை அதிகாரிகள் முன்னிலையில் எழுப்பினர். எவ்வித மாற்று இடங்களும் வழங்கிடாமல் வீடுகள் இடிக்கப்பட்டு பல்வேறு குடும்பங்கள் செய்வதறியாது நிர்க்கதியாய் வீதியில் நிற்கும் நிலையை கண்டு பார்போர்களும் கண்ணீர் வடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மாற்று இடம் வழங்காமல் எங்கள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி இந்த விடியா தி.மு.க. அரசு நீடிக்காது. விரைவில் கலைந்து விடும் என்று பொதுமக்கள கண்ணீரோடு சாபமிட்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.