• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

September 22, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

by Namadhu Amma
September 22, 2022
in தற்போதைய செய்திகள்
0
கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல்

விடியா திமுக அரசை அகற்றுவோம், அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக்கொள்வோம் என்று கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கழக அம்மா பேரவையின் மாநில இணை செயலாளர் ஆர்.வி.என் கண்ணன், நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஒன்றியக்குழுத்தலைவர் ரெஜினா நாயகம், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாண்டியன், அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி உதயகுமார் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் கழக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது:-

இன்றைய திராவிட மாடல், ஒன்றிய அரசு என்று பல்வேறு வார்த்தை ஜாலங்களை சொல்லி தி.மு.க மக்களை ஏமாற்றுகிறது. திராவிட இயக்கத்தை ஆளுமை இயக்கமாகவும், மக்கள் இயக்கமாகவும் கொண்டு வந்த சக்தி அண்ணாவுக்கு சேரும். அண்ணாவின் உயிரோட்டமான ஆற்றல் மிக்க பேச்சாற்றலும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை பேரியக்கமாக வளர அரும்பாடுபட்டு முதலமைச்சரானார்.

அந்தத் தருணத்தில் கரையான் புற்று வளர்க்க கருநாகம் புகுந்தது போல் திமுகவிற்கு திருக்குவளையை சேர்ந்த கருணாநிதி கட்சிக்கு வந்து திமுகவை சொந்த கட்சியாக மாற்ற முயற்சி செய்தது விளைவாக தான் அ.தி.மு.க உருவானது.

அதேபோன்று தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா தான் காரணம். ஆனால், தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு காரணம் கருணாநிதி தான் என இன்றைய முதல்வர் வரலாற்றை எப்படியாவது அண்ணாவின் புகழை மூடிமறைக்க சூழ்ச்சி செய்து வருகிறார்.

தற்காலிகமாக தி.மு.க வெற்றி பெற்று உள்ளது. அதுவும் தேர்தலின் போது குடும்பத்தலைவிக்கு மாதம்தோறும் ரூ. 1000, நீட் தேர்வு ரத்து, வரி குறைப்பு, கல்வி கடன், மின்கட்டணம் குறைப்பு, சொத்து வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி வசதியை ஏற்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ளது.

அதேபோன்று தாலிக்கு தங்கம், லேப்டாப், கருவுற்ற தாய்மார்களுக்கு பரிசுப்பெட்டகம், இப்படி புரட்சித்தலைவி அம்மா பெயரில் கழக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் 425ஐ நிறைவேற்றி விட்டதாக சட்டமன்றத்தில் திமுக அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பொய் பேசினார்கள்.

அப்படி திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போது தமிழகமெங்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை, கள்ளக்குறிச்சி சம்பவம், பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள், உள்பட எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை, உள்ளிட்ட பல்வேறு போதை மாநிலமாக தற்போது தமிழ்நாடு மாறி கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இந்த விடியா அரசை அகற்றுவோம். புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு கழக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.