• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

September 29, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

by Namadhu Amma
September 29, 2022
in தற்போதைய செய்திகள்
0
எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை,

மதுரை பழங்காநத்தம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆகிய இடங்களில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டங்களில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிபங்கேற்க உள்ளதையொட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்று தெரிவித்தார்.

மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள நடராஜர் தியேட்டர் அருகே இன்று விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணியை கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன்,

கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து மக்கள் பங்கேற்கும் இடத்தினையும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென் மாவட்ட மக்களின் இதய பகுதியாக திகழும் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்திற்கு அம்மா ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையும், விடியா திமுக அரசின் மக்களை வாட்டி வதைக்கும் மக்கள் விரோத நிர்வாக சீர்கேட்டையும் கண்டித்து எடப்பாடியார் தோலுரித்து காட்டுகிறார்,

இவ்வாறு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

இதன்பின்னர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்ட இடத்தை கழகப்பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர்

அதனைத்தொடர்ந்து கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை, பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை விருதுநகர் மாவட்டத்திற்கு அம்மா அரசு செய்துள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய மருத்துவக்கல்லூரியை எடப்பாடியார் வழங்கினார், அதேபோல் பட்டாசு தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்தார். நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்தில் பெரும் திரளாக மக்கள் பங்கேற்கின்றனர் என்று கூறினார்

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.