ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
தங்கம் வென்ற இந்திய அணியில் மதுரையைச் சேர்ந்த தமிழக வீராங்கனை கமலினியும் இடம்பெற்றிருந்தார். அவரது சாதனையைப் பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இன்று (செப்.22) அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணிக்கும், கமலினிக்கும் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், கமலினியின் வெற்றி தமிழக இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





















