கோவை தொண்டாமுத்தூர் அருகே போளுவாம்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்து வரும் 90 வயது கமலாத்தாளுக்கு, மீண்டும் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இலவச சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் சிரமப்பட்ட கமலாத்தாள், செப்.21-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சர் வே.சம்பத்குமாரும் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (செப்.22) கமலாத்தாளின் கடைக்கு இலவச காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்பட்டது.
இனி அவருக்கு தடையின்றி கட்டணமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





















