ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் அணி பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற இளவேனில் வாலறிவன், இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தனது கடின உழைப்பு மற்றும் அயராத முயற்சியால் ஆசியப் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்ட எஸ்.பி.வேலுமணி, அவரது சாதனைப் பயணம் மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.





















