தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வரும் 19 ஆம் தேதி ரேசன் அட்டை பயனாளிகளுக்கு கைரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என ன உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் மட்டும் கைரேகை சரிபார்ப்பு முகாம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ரேசன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் வருகிற 19 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
எனவே, தற்போது வரை நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















