பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் 17.9.2026 அன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவருக்கு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தமது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது தலைமையின் கீழ் இந்தியா வலிமையான மற்றும் வளமான நாடாக தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
வலுவான மற்றும் வளமான இந்தியா குறித்த தங்களது தொலைநோக்குப் பார்வையும், நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது முயற்சிகளும் இந்தியாவை மேலும் பெரும் வெற்றியை நோக்கித் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து, நாட்டுக்கு தொடர்ந்து சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.





















